Saturday, September 15, 2012

மனிதன் தூங்கும் போது தான்

மனிதன் தூங்கும் போது தான் 
பாவம் செய்யாமல் இருக்கிறான் 
அதனால் அவனைத் 
தூக்கத்தில் இருந்து எழுப்பக்கூடாது...

இன்று கண்ணகி இருந்திருந்தால்...

இன்று கண்ணகி இருந்திருந்தால்
கால் சிலம்பை உடைத்திருக்க மாட்டாள் 
மார்வாடிக் கடையில் அடகு வைத்திருப்பாள்   
                                                                                      - வைரமுத்து  

Friday, September 14, 2012

கோபம் அரக்க மனத்தின் ஆயுதம் ...

கோபம் அரக்க மனத்தின் ஆயுதம் 
அதற்கு அழிக்கத்தான் தெரியும் 
கோபம் வாழ்க்கையை சிக்கலாக்கும் 
உறவுகளைச் சிதைக்கும் 
அமைதியைக் குலைக்கும் ஆயுளைக் குறைக்கும் 
                                                                                                            புத்தர் 

சந்தோசத்தைத் தேடி ...

சந்தோசத்தைத் தேடி 
வெகு தொலைவு செல்ல வேண்டியதில்லை 
அது உங்களைச் சுற்றியே 
உங்களைப் பற்றியே இருக்கிறது 
சந்தோசத்தை உங்களிடமே காண முடியாவிட்டால் 
அதை தேடி அலைவதில் பயனில்லை ...

Thursday, September 13, 2012

துன்பப் பறவைகள்...

துன்பப் பறவைகள் உன் தலைக்கு 
மேல் வந்து வட்டமிடுவதை தவிர்க்க 
முடியாது...ஆனால் அவை உன் கூந்தலிலே 
உட்கார்ந்து கூடு கட்டிக் கொள்ளாமல் 
தடுக்க முடியும்...

மலையின் உயரத்தை அளக்காதே....


மலையின் உச்சியை அடைகிற வரைக்கும் 
மலையின் உயரத்தை அளக்காதே 
உச்சியை அடைந்த பின் 
அது எவ்வளவு சிறியது  என்பதை அறிவாய்  !
அது போல தான்   வாழ்க்கையும்.....

எனக்கு மிகவும் பிடித்த பாடல்



எனக்கு மிகவும் பிடித்த பாடல் 
:
Smiley
கள்ளிகாட்டில்  பிறந்த  தாயே 
என  கல்லோடச்சு  வளத்த நீயே 
முள்ளு  காட்டில்  மொளச்ச  தாயே 
என  முள்ளு  தைக்க  விடல  நீயே 

காடைக்கும் 
காட்டு  குருவிக்கும்  
இந்த  புதருக்குள்  இடம்  உண்டு 
கூடைக்கும்  அடிக்கும்  குளிருக்கும்
தாயே  ஒதுங்கதான்  இடம்  உண்ட 

கரடு மேடையே  மாத்துன 
அவ  கல்ல  புழிஞ்சு கஞ்சி உத்துன 
கள்ளிகாட்டில்  பிறந்த  தாயே 
என  கல்லோடச்சு  வளத்த நீயே 
முள்ளு  காட்டில்  மொளச்ச  தாயே 
என  முள்ளு  தைக்க  விடல  நீயே 

உழவு  காட்டுல  வித  விதைப்ப 
ஓணா  கரடுல   கூழ்  குடிப 
ஆவாரம் குழையிலே கை  துடைப்ப
பாவம்  அபா ..ஓஒ ...
வேலி  முள்ளில்  அவ  விறகெடுப
நாழி  அரசி  வச்சு  ஒலை  எரிப
புள்ள உண்ட  மிச்சம்  உண்டு  உசிர்  வளப
தியாகம்  அப ...
கிழக்கு  விடியும்  முன  முளிகுற 
அவ  உலக்க  பிடிச்சு  தான்  பிறகுற
மன்ன  கிண்டி  தான்  பொழைக்கிற
உடல்  மக்கி   போகும்  மட்டும்  உழைக்கிற 

கள்ளிகாட்டில்  பிறந்த  தாயே 
என  கல்லோடச்சு  வளத்த நீயே 
முள்ளு  காட்டில்  மொளச்ச  தாயே 
என  முள்ளு  தைக்க  விடல  நீயே 

தங்கம்  தனி  தங்கம்  மாசு  இல்ல 
தாய்  பல்  ஒன்னில்   மட்டும்  தூசு  இல்ல 
தாய்  வழி  சொந்தம்  போல  பாசம்  இல்ல 
நேசம்  இல்ல ...ஓஒ ..
தாயே  கையில்  என்ன  மந்திரமோ 
கேபக்களியில்  ஒரு  நெய்  ஒழுகும்  
காஞ்ச  கரு வாடு  தேன்  ஒழுகும்  
அவ  சமைகையிலே ...
சொந்தம்  நூறு  சொந்தம்  இருக்குதே 
பெத்த  தாய்  போல  ஒன்னு  நிலைக்குத 
சாமி  நூறு  சாமி  இருக்குதே 
அட  தாய்  ரெண்டு  தாய்  இருகுத 

கள்ளிகாட்டில்  பிறந்த  தாயே 
என  கல்லோடச்சு  வளத்த நீயே 
முள்ளு  காட்டில்  மொளச்ச  தாயே 
என  முள்ளு  தைக்க  விடல  நீயே