Saturday, December 22, 2012

நேர்மையில்லாத காவல்

சீனப் பெருஞ்சுவரைச் சந்திரனிலிருந்து பார்த்தாலும் பூமியில் தெரியும் மிகப் பெரிய அதிசயம் என்பார்கள். எட்டு மீட்டர் உயரமும் நான்கு முதல் ஐந்து மீட்டர் அகலம் கொண்ட இப்பெருஞ்சுவரைச் சீன மக்கள் எதிரிகளிடம் தங்களைப் பாதுகாப்பதற்காகக் கட்டி முடித்தார்கள். பல ஆண்டுகள், பலருடைய உழைப்பில் உருவானது இந்த பெருஞ்சுவர். இந்தப் சீனப் பெருஞ்சுவரைக் கட்டி முடித்ததும் மக்கள் அளவில்லாத மகிழச்சி கொண்டார்கள். இனி எதிரிகள் தங்கள் நாட்டுக்கு வர முடியாது என்று கருதினார்கள். ஆனால் சில நாட்களிலேயே எதிரிகள் நாட்டில் ஊடுருவி விட்டார்கள். காரணம், வாயிற்காவலில் நின்ற சீன நாட்டுக் காவலர்களுக்கு லஞ்சம் கொடுத்து இவர்கள் ஊடுருவி விட்டார்கள்.

நேர்மையில்லாதவர்கள் எல்லா இடங்களிலும் விரவியுள்ளதால் தான் இன்று உலகில் வன்முறையும் அதன் விளைவான அச்சமும் தலைவிரித்தாடுக்கிறது தன் நலனுக்காகத் தேசத்தைக் காட்டிக் கொடுபவர்கள் மன்னிக்க இயலாத குற்றவாளிகள். ஆனால் இவர்களையும் மனம் மாற்றிட வேண்டியது நல்ல அரசின் பொறுப்பு.

சுயநலம்,பேராசை, கோழைத்தனம் முதலானவைகள் தான் நம் சுதந்திரத்தை இழக்கச் செய்யும் ஜென்ம எதிரிகள்.
                                                            ஷேக்ஸ்பியர்.   
   <�� n<�ҩ @k� e='mso-spacerun:yes'>                                   ஷேக்ஸ்பியர்.   

Friday, December 21, 2012

போர்டு(ford) போட்ட போடுமோட்டார் கார் உற்பத்தியில் புகழ்பெற்ற தொழில் அதிபர் போர்டு (ford) இங்கிலாந்து சென்றிருந்த சமயம் தனது தொழிற்சாலையில் தயாராகும் போர்டு கார்களைப் பயன்படுத்தாமல் ரோல்ஸ்ராய் காரரைப் பயன்படுதிக்கொண்டிருந்தார். புகழ்பெற்ற தனது கம்பெனி காரை விடுத்து வேறொரு நிறுவனத்தின் காரைப் பயன்படுத்தும் இவரை ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள் மக்கள். அச்சமயம் இங்கிலாந்து அரசர் ஐந்தாம் ஜார்ஜ் கொடுத்த விருந்தில் கலந்துகொள்ளச் சென்ற போர்டை நோக்கி இங்கிலாந்து அரசர் “தாங்கள் வேறொரு நிறுவனத்தின் காரைப் பயன்படுத்துவதன் நோக்கம் என்ன?” என்றார் அதற்கு. போர்டு “உலகெங்கிலுமுள்ள மக்கள் எங்கள் தொழிற்சாலையின் கார்களைத்தான் விரும்பி வாங்குகிறார்கள் எனவே எங்கள் தொழிற்சாலையில் காரை முன்பதிவு செய்தவர்களுக்கு விற்று விடுகிறார்கள். எங்கள் நிறுவனத் தொழிலாளர்களுக்கு முதலாளியின் தேவையைவிட வடிகையாளர்களின் தேவையே முக்கியம்” எனக் கூறினார் போர்டு நிறுவனத்தின் வெற்றியின் இரகசியம் புரிந்தது.

வித்தியாசமாகச் சிந்திப்பவர்களும், விசித்திரமாகச் செயல்படுபவர்களும், சாதுர்யாமாகப் பேசுபவர்களும் பல சாதனைகளைச் செய்துள்ளது வரலாறு.

எப்படிப்பட்ட மனிதரிடமிருந்தும் நாம் ஒரு பாடம் கற்றுக்கொல்லாம்,கூர்ந்து கவனித்தால்!

செய்யும் தொழிலே தெய்வம்


தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு கோடை காலத்தில் தனது ஆய்வகத்தில் வெகு நேரம் பணி செய்து விட்டு மிகுந்த களைப்போடு வீடு திரும்பினார்.அவர் அதிகமாக,களைத்துக் காணப்பட்டதால் அவரது மனைவி அவரிடம் “நீங்கள் தயவு செய்து  நல்ல ஒய்வு எடுக்க வேண்டும்”
என்றார். “சரி எங்கு செல்லலாம்?” என்று எடிசன் கேட்க, “உலகிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்த மகிழ்ச்சி தரும் இடத்திற்குச் செல்லுங்கள்” என்றார். எடிசன்  தன் மனைவியிடம் “சரி, நிச்சயமாக நாளை காலை நீ சொன்னபடி செல்கிறேன்” என்றார். மறுநாள் காலை எடிசன் எழுந்து வழக்கம் போல தனது ஆய்வகத்திற்கு மகிழ்ச்சியோடு சென்றாராம். ஆம்! அவருக்கு இவ்வுலகில் மிகவும் பிடித்த இடம் அவர் பணி செய்யும் ஆய்வகமாக இருந்துள்ளது.

பெரிய அறிஞர்கள் தங்கள் ஆய்வுகளைத் தியானமாகக் கருதி முழு ஈடுபாட்டுடன் செய்தால்தான் எண்ணற்ற கண்டுபிடிப்புகளை உலகிற்கு வழங்க முடிந்தது. விரும்பிச் செய்யும் எந்த சேவையும் எளிதில் சோர்வைத் தராது. மாறாக சுறுசுறுப்பினை அதிகரிக்கும்.

விடாமுயற்சியுடன் கூடிய சலியாத உழைப்பு ஒன்றினால் தான்
உள்ளத்து உறுதியை பெருக்க முடியும்.

சிந்தித்துப் பயிலுதல்..

அலெக்சாண்டரின் தந்தை ஒரு சமயம் பயிற்சிக்காக அவரை உயரமான பாறையிலிருந்து குதிக்கச் சொன்னார். அப்போது அலெக்சாண்டர் பயத்துடன் தந்தையைப் பார்த்தார். அவரது தந்தையோ “பயப்பாடாதே பயிற்சி செய்”என்றார். அப்போது அலெக்சாண்டர். குதித்தார்.அவருக்கு  அடி அடிப்பட்டது. “ஒரு தந்தை இப்படித் தன் மகனைத் துன்புறுத்தலாமா?” என்று கோபத்தோடு கேட்டார் அலெக்சாண்டர். அதற்கு அவரது தந்தை “மகனே, நான் உன்னைப் பயப்படாதே, பயிற்சி செய் என்று சொன்னேன். ஆனால் சிந்திக்கக் கூடாது என்று சொல்லவில்லை. நீ சிந்தித்திருந்தால் கீழே விழுந்தால் அடிபடுமே! என்று என்னைக் கேட்டிருப்பாய்  அல்லவா”? என்று பதில் அளித்தாராம்.

பெற்றோர் சொல்லுக்காகக் கட்டுப்பட்டாலும், அதைச் செய்வதற்கு முன் ஆராய்ந்து செய்ய வேண்டும்.அனுபவங்கள் பல நல்ல படிபினைகளைத் தரும்.அது  ஆராய்ந்து செயல்படுவது நல்ல முடிவுகளைத் தரும்.


மற்றவர்களுக்காக வாழ்வது சுலபம். எல்லோரும் அப்படித்தான் வாழ்கிறார்கள். உங்களுக்காக நீங்கள் வாழ வேண்டும்.