Friday, December 21, 2012

செய்யும் தொழிலே தெய்வம்


தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு கோடை காலத்தில் தனது ஆய்வகத்தில் வெகு நேரம் பணி செய்து விட்டு மிகுந்த களைப்போடு வீடு திரும்பினார்.அவர் அதிகமாக,களைத்துக் காணப்பட்டதால் அவரது மனைவி அவரிடம் “நீங்கள் தயவு செய்து  நல்ல ஒய்வு எடுக்க வேண்டும்”
என்றார். “சரி எங்கு செல்லலாம்?” என்று எடிசன் கேட்க, “உலகிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்த மகிழ்ச்சி தரும் இடத்திற்குச் செல்லுங்கள்” என்றார். எடிசன்  தன் மனைவியிடம் “சரி, நிச்சயமாக நாளை காலை நீ சொன்னபடி செல்கிறேன்” என்றார். மறுநாள் காலை எடிசன் எழுந்து வழக்கம் போல தனது ஆய்வகத்திற்கு மகிழ்ச்சியோடு சென்றாராம். ஆம்! அவருக்கு இவ்வுலகில் மிகவும் பிடித்த இடம் அவர் பணி செய்யும் ஆய்வகமாக இருந்துள்ளது.

பெரிய அறிஞர்கள் தங்கள் ஆய்வுகளைத் தியானமாகக் கருதி முழு ஈடுபாட்டுடன் செய்தால்தான் எண்ணற்ற கண்டுபிடிப்புகளை உலகிற்கு வழங்க முடிந்தது. விரும்பிச் செய்யும் எந்த சேவையும் எளிதில் சோர்வைத் தராது. மாறாக சுறுசுறுப்பினை அதிகரிக்கும்.

விடாமுயற்சியுடன் கூடிய சலியாத உழைப்பு ஒன்றினால் தான்
உள்ளத்து உறுதியை பெருக்க முடியும்.

No comments:

Post a Comment