Friday, December 21, 2012

சிந்தித்துப் பயிலுதல்..

அலெக்சாண்டரின் தந்தை ஒரு சமயம் பயிற்சிக்காக அவரை உயரமான பாறையிலிருந்து குதிக்கச் சொன்னார். அப்போது அலெக்சாண்டர் பயத்துடன் தந்தையைப் பார்த்தார். அவரது தந்தையோ “பயப்பாடாதே பயிற்சி செய்”என்றார். அப்போது அலெக்சாண்டர். குதித்தார்.அவருக்கு  அடி அடிப்பட்டது. “ஒரு தந்தை இப்படித் தன் மகனைத் துன்புறுத்தலாமா?” என்று கோபத்தோடு கேட்டார் அலெக்சாண்டர். அதற்கு அவரது தந்தை “மகனே, நான் உன்னைப் பயப்படாதே, பயிற்சி செய் என்று சொன்னேன். ஆனால் சிந்திக்கக் கூடாது என்று சொல்லவில்லை. நீ சிந்தித்திருந்தால் கீழே விழுந்தால் அடிபடுமே! என்று என்னைக் கேட்டிருப்பாய்  அல்லவா”? என்று பதில் அளித்தாராம்.

பெற்றோர் சொல்லுக்காகக் கட்டுப்பட்டாலும், அதைச் செய்வதற்கு முன் ஆராய்ந்து செய்ய வேண்டும்.அனுபவங்கள் பல நல்ல படிபினைகளைத் தரும்.அது  ஆராய்ந்து செயல்படுவது நல்ல முடிவுகளைத் தரும்.


மற்றவர்களுக்காக வாழ்வது சுலபம். எல்லோரும் அப்படித்தான் வாழ்கிறார்கள். உங்களுக்காக நீங்கள் வாழ வேண்டும்.  

No comments:

Post a Comment